/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
26ல் சேலம் கோட்ட பொதுக்குழு; பொறுப்பாளர் பங்கேற்க அறிவுரை
/
26ல் சேலம் கோட்ட பொதுக்குழு; பொறுப்பாளர் பங்கேற்க அறிவுரை
26ல் சேலம் கோட்ட பொதுக்குழு; பொறுப்பாளர் பங்கேற்க அறிவுரை
26ல் சேலம் கோட்ட பொதுக்குழு; பொறுப்பாளர் பங்கேற்க அறிவுரை
ADDED : ஜன 20, 2025 07:15 AM
தாரமங்கலம்: இந்து முன்னணியின், சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், தாரமங்கலம், பெரியாம்பட்டியில் நேற்று நடந்தது. மாவட்ட அமைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
அதில், மாநில செயலர் தாமு வெங்கடேஸ்வரன் பேசுகையில், ''கிளை கமிட்டிகளை அதிகப்படுத்தி, இயக்க வளர்ச்சியை பலப்படுத்த வேண்டும். ஜன., 26ல் திருச்செங்கோட்டில் நடக்க உள்ள இந்து முன்னணி சேலம் கோட்ட பொதுக்குழுவில் அதிகளவில் பொறுப்பாளர்கள் பங்கேற்க வேண்டும்,'' என்றார். மேலும் மாவட்டத்தில் புதிதாக, 50 நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். மாவட்ட பொதுச்செயலர்கள் சின்னுசாமி, செல்வராஜ், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.