/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சேலம் கோட்ட ரயிலில் 9 மாதத்தில் 2 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றம்'
/
'சேலம் கோட்ட ரயிலில் 9 மாதத்தில் 2 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றம்'
'சேலம் கோட்ட ரயிலில் 9 மாதத்தில் 2 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றம்'
'சேலம் கோட்ட ரயிலில் 9 மாதத்தில் 2 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றம்'
ADDED : ஜன 27, 2025 03:20 AM
சேலம்: குடியரசு தின விழாவையொட்டி, சேலம், ஜங்ஷனில் உள்ள ரயில்வே கோட்ட அலுவலகத்தில், அதன் மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, தேசியக்கொடி ஏற்றினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
ரயில்களில் நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் - டிசம்பர் வரை, 2.085 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. தற்போது முன்பதிவு செய்த டிக்கெட்டுகளில், 40 சதவீத வருவாய், கவுன்-டர்கள் மூலம் வழங்கப்படும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்-டுகளில், 10 சதவீத வருவாய், டிஜிட்டல் முறைகள் மூலம் வசூ-லிக்கப்படுகிறது.நீலகிரி மலை ரயிலில், 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை, 489 சிறப்பு பயணங்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம், 17.88 கோடி ரூபாய் கிடைத்தது. இது, இந்த ரயில் வரலாற்றில், ஓராண்டில் இல்லாத அதிகபட்சம்.
பல்வேறு விதிகளில் தவறு செய்தவர்கள் மீது, 5,800 வழக்-குகள் பதிவு செய்யப்பட்டு, 37.43 லட்சம் ரூபாய் அபராதம் வசூ-லிக்கப்பட்டது. போலி ஐ.டி., பயன்படுத்தி மோசடியாக ரயில்வே இ - -டிக்கெட்டுகளை, முன்பதிவு செய்த, 76 பேர் கைது செய்யப்பட்டனர். 19.42 லட்சம் ரூபாய் மதிப்பில், 1,386 ரயில்வே இ - டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் மேலாளர் சிவலிங்கம், உதவி பாதுகாப்பு கமிஷனர் செங்கப்பா, கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

