/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மண்டல டவுன் பஞ்., அலுவலக கண்காணிப்பாளர் பாலியல் புகாரில் கைது

ADDED : ஜன 13, 2025 02:26 AM
சேலம்: சேலம் மாவட்டம் வீரக்கல் டவுன் பஞ்சாயத்தில் துாய்மை பணி-யாளராக இருந்தவர், 2024ல் விபத்தில் சிக்கினார். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் அவரது மகள், கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு, சேலம் மண்டல டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பளராக பணிபுரியும் தேவராஜன், 55, என்பவரிடம் விண்ணப்பித்தார்.இதை தொடர்ந்து மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'வாரிசு வேலைக்கு சகஜமாக பழக வேண்டும். தேவையான வேலைகளை செய்து தரவேண்டும்' என பேசியுள்ளார். இதனால் அதிர்ந்து போன பெண், அவர் பேசியதை 'ரெக்கார்ட்' செய்-துள்ளார்.
தேவராஜன் தனது செயலை தொடர்ந்த நிலையில், மன வேத-னையடைந்த பெண், சேலம் டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். போலீசார் விசாரணையில் பாலியல் ரீதியாக தொந்தரவு தந்ததும் தெரிய வந்தது. பெண் வன்கொ-டுமை தடுப்பு சட்டத்தில், தேவராஜனை நேற்று கைது செய்தனர்.