ADDED : மார் 21, 2024 01:30 AM
சேலம், தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் எம்.பி., பார்த்திபன் அறிக்கை:
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 2019ல் சேலம் லோக்சபா தொகுதியில் வேட்பாளராக அறிவித்து வெற்றி பெற செய்தார். வாய்ப்பு வழங்கிய அவருக்கு நன்றி. வெற்றி பெற்றது முதல் இதுவரை தொடர்ந்து தொகுதி முழுதும் குக்கிராமம் வரை சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தேன். அதற்கு தீர்வு கண்டு மக்கள், கட்சியினரிடம் தொடர்பில் இருந்து நன் மதிப்பை பெற்றேன்.
கொரோனா காலத்தில், 2 ஆண்டு இடைவிடாமல் தொடர்ந்து மக்களுக்கும், கட்சியினருக்கும் செய்த சேவையை, தலைவர், தொலைபேசியில் அழைத்து பாராட்டினார்.
இது எனக்கு பெருமைக்குரிய நிகழ்வு. 5 ஆண்டு கால எம்.பி., பணியில், ஒத்துழைப்பு வழங்கிய கலெக்டர், போலீஸ் துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பத்திரிகை நண்பர்கள், மக்கள், கட்சியினர் அனைவருக்கும் நன்றி. சேலம், 4 ரோட்டில் உள்ள அலுவலகம், மக்களுக்கு உதவிட வழக்கம்போல் செயல்படும். 2024 லோக்சபா தேர்தலில், தலைவரால் சேலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வகணபதிக்கு வாழ்த்து.

