sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தில் எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்புஅமைச்சர் பேச்சில் உடன்பாடு

/

சேலத்தில் எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்புஅமைச்சர் பேச்சில் உடன்பாடு

சேலத்தில் எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்புஅமைச்சர் பேச்சில் உடன்பாடு

சேலத்தில் எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்புஅமைச்சர் பேச்சில் உடன்பாடு


ADDED : ஜன 05, 2025 01:23 AM

Google News

ADDED : ஜன 05, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கல்குவாரி உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்களுடன், விலை குறைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.

இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது:

அரசு ஒப்பந்தங்களான சாலை அமைத்தல், பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள், கருணாநிதி நினைவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றை கல்குவாரிகள் வினியோகிக்கின்றன. சமீபத்தில் அதன் விலை உயர்த்தப்பட்டதால், ஒப்பந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை களைய, கல்குவாரி உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர் களுடன் ஆலோசிக்கப்பட்டது.

மக்கள் நலன் கருதி, பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள, ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றை, இரு தரப்புக்கும் பாதிப்பின்றி, உரிய விலையில் வழங்க கேட்டுக்கொண்டதால் விலையை குறைத்து வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் பிருந்தாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க மாநில துணைத்தலைவர் கார்மேகம் கூறியதாவது:அமைச்சர் கேட்டுக்கொண்டதால், சேலத்தில், எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட அனைத்து ஜல்லி வகைகளின் விலை, யுனிட்டுக்கு தலா, 1,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச், 31 வரை, இந்த விலை குறைப்பு தொடரும். பின் தமிழக அரசு நடவடிக்கையை பொறுத்து விலையில் மாற்றம் வரும். சேலம் மாவட்ட கல்

குவாரி உரிமையாளர் சங்க செயலர் ராஜா, பொருளாளர் ராஜ்குமார், தமிழக பொதுப்பணி, நீர்வள ஆதாரத்துறை ஒப்பந்ததாரர் சங்க மாவட்ட தலைவர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

16 கண் மதகு வெளியே தேங்கிய நீரில் துர்நாற்றம்

மேட்டூர், மேட்டூர் அணை கடந்த டிச., 31ல் நிரம்பியது. அணையில் இருந்து நேற்று முன்தினம் காலை முதல், வினாடிக்கு, 12,000 கனஅடி நீர் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படுகிறது.

வினாடிக்கு, 1,992 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 1,128 கன அடியாக சரிந்தது. திறப்பை விட வரத்து வெகுவாக குறைந்ததால், நேற்று முன்தினம், 119.76 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 119.14 அடியாகவும், 93.08 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, நேற்று, 92.10 டி.எம்.சி.,யாகவும் சரிந்தது.

இருப்பினும் கடந்த, 31ல் அணை நிரம்பியபோது, ஷட்டர் பகுதியில் தேங்கி நின்ற பாசி படலம் கலந்த நீர், காற்று பலமாக வீசியதால் ஷட்டர்களின் மேல் பகுதி வழியே வெளியேறி உபரிநீர் வெளியேற்றும் ஓடையில் உள்ள குட்டைகளில் தேங்கி நிற்கிறது. ஆனால் பச்சை, ஊதா நிறத்தில் காணப்படும் பாசி படலத்தால் துர்நாற்றம் வீசுகிறது.

சேலம் கேம்ப் பகுதியில் இருந்து புதுபாலம் வழியே வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர். தேங்கி நிற்கும் பாசி படலத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை தடுக்க, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us