/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
களப்பயணம் முலம் தேர்ச்சிபள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி
/
களப்பயணம் முலம் தேர்ச்சிபள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 28, 2011 02:50 AM
மேட்டூர்:கல்வித்துறை உத்தரவுபடி களப்பயணம் மேற்கொள்வது உபயோகமாக
இருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள்
வழங்கும் வரை மாணவர்களை அருகாமையில் உள்ள சுற்றுலா தளங்கள், அணை,
நீர்தேக்கம், கோவில், உழவர் சந்தை, அஞ்சலகம் உள்பட பல இடங்களுக்கு
களப்பயணம் அழைத்து செல்ல கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி மாநிலம்
முழுவதும் அருகாமையில் உள்ள சுற்றுலா தளங்கள், பள்ளிமாணவர்களை ஆசிரியர்கள்
களப்பயணம் அழைத்து செல்கின்றனர்.
மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளி
மாணவர்களை ஆசிரியர்கள் நேற்று மேட்டூர் உழவர் சந்தைக்கு அழைத்து சென்று
காய்கறிகள், விற்பனை செய்யும் விதம் குறித்து விளக்கம் அளித்தனர்.அப்போது
ஒவ்வொரு காய்களாக எடுத்து காட்டி, அதன் பெயரை ஆசிரியர்கள் கேட்டபோது,
மாணவர்கள் கத்தரிக்காய், முருங்கைக்காய் என அதன் பெயரை கூறினர். அடுத்து
மக்காசோளத்தை காட்டி பெயர் கேட்டபோது, மாணவர்களுக்கு அதை பற்றிய விபரம்
தெரியாததால் 'சோளக்காய்' என கூறினர்.அதை தவறு எனக்கூறி, சோளக்கதிர் என,
ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர். இதுபோல காய்கறிகள் குறித்து மாணவர்களுக்கு
ஏற்பட்ட ஏராளமான சந்தேகத்தை, காய்கறிகளை நேரில் காட்டி ஆசிரியர்கள்
விளக்கம் அளித்தது பயனுள்ளதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.