sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இடம் மாற்றியதால் பொலிவிழந்த நூலகம்

/

இடம் மாற்றியதால் பொலிவிழந்த நூலகம்

இடம் மாற்றியதால் பொலிவிழந்த நூலகம்

இடம் மாற்றியதால் பொலிவிழந்த நூலகம்


ADDED : ஜூலை 28, 2011 02:51 AM

Google News

ADDED : ஜூலை 28, 2011 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் நகரில் புகழ் பெற்று விளங்கிய நூலகம், இன்று வாசகர்கள் வருகையின்றி தவிக்கிறது.

ஆயிரக்கணக்கான புத்தகங்களை பாதுகாப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஓய்வு பெற்ற நூலகர் தாரமங்கலம் குப்புசாமி கூறியதாவது:முதன் முதலாக சேலம் நகரில், 1953ல் நாட்டாண்மை கட்டிடத்தில் நூலகம் துவக்கப்பட்டது. இரண்டாண்டுக்கு பின், 1955ல் மாநகராட்சி அலுவலகம் எதிரில், கிளை நூலகம் துவக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில், ஓடுகளுடன் கூடிய கட்டிடம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் நூலகம் சிறப்புடன் செயல்பட்டது. நகரின் மத்தியில் நூலகம் அமைந்ததால், நாளுக்கு நாள் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நூலகத்தில் சங்க இலக்கிய புத்தகங்கள், ஆங்கில புத்தகங்கள், குழந்தைகளின் அறிவை மேம்படுத்தக்கூடிய புத்தகங்கள், மணிமேகலை, சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், மகாபாரதம் மற்றும் வரலாற்று புத்தகங்கள், அறிவியல் தொடர்பான புத்தகங்கள் உள்ளன.படிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, நன்கொடையாளர்களின் மூலம் பணம் வசூலிக்கப்பட்டது. அதன் மூலம், 1997ல் சொந்தமாக 'திருமால் மாநகர கிளை நூலகம்' கட்டப்பட்டது. 8,000 உறுப்பினர்கள் நூலகத்தில் சேர்ந்தனர். 60 புரவலர்கள் நூலகத்தில் இணைந்தனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. சுற்றுப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் தினமும் நூலகத்தில் குறிப்பு எடுக்க வந்தனர்.கடந்தாண்டு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதற்காக மாநகராட்சி எதிரே இருந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அப்போது அங்கிருந்த நூலகமும் இடித்து தள்ளப்பட்டது. சேலம், சத்திரம் காமராஜர் மாநகராட்சி திருமண மண்டபத்துக்கு நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது அந்த இடத்தில் இடவசதியின்றி நூலகம் செயல்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.நூலகர் மாதவி கூறியதாவது:ஓராண்டாக சத்திரத்தில், நூலகம் செயல்பட்டு வருகிறது. நகரின் மத்தியில் இருந்து நூலகம் மாற்றப்பட்ட பின், புத்தகங்களை படிக்க வருவோரின் எண்ணிக்கை மிக மிக குறைந்தது. முன்பிருந்த இடத்தில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து கொண்டிருந்தனர். இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தினமும் 20லிருந்து 30 பேருக்குள் மட்டுமே நூலகத்துக்கு வருகின்றனர். பெரும்பாலான உறுப்பினர்கள் வருவதில்லை. இங்குள்ள, 49 ஆயிரத்து 454 புத்தகங்களை பாதுகாப்பாக வைக்க, 'ரேக்' வசதியில்லை. புத்தகங்கள் தரையிலும், மேஜையிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.வீணாகி கிடக்கும் கம்ப்யூட்டர்கள்நூலக பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்களும் பயன்படுத்த முடியாமல், அறையில் ஓரங்கட்டப்பட்டுள்ளது. இதனால், இன்டர்நெட் வசதியும் இல்லாமல் போய்விட்டது. கழிப்பிட வசதி இல்லாததால், நூலக பெண் பணியாளர்கள் அவதிப்படுகின்றனர். மழை காலத்தில் சாக்கடை தண்ணீர் நூலக வளாகத்துக்குள் நுழைந்து விடுவதால், அந்த இடம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. நூலகம் பழைய கட்டிடத்தில் இருப்பதால், சுற்றுப்பகுதியும் முட்புதர்களாக காட்சியளிக்கிறது. நூலகத்தை கலெக்டர் அலுவலகமோ அல்லது நாட்டாண்மை கட்டிடத்திற்கு மாற்றினால், படிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.






      Dinamalar
      Follow us