/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம் சிறந்த அறிவியல் நிலையமாக தேர்வு
/
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம் சிறந்த அறிவியல் நிலையமாக தேர்வு
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம் சிறந்த அறிவியல் நிலையமாக தேர்வு
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம் சிறந்த அறிவியல் நிலையமாக தேர்வு
ADDED : ஆக 01, 2011 04:12 AM
பனமரத்துப்பட்டி : சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம், தமிழகத்தில் சிறந்த
அறிவியல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு, மாநில அரசு விருது
வழங்கியுள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தின் கட்டுப்பாட்டில்,
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டில்,
தமிழகத்தில் சிறந்த அறிவியல் நிலையமாக சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம்
தேர்வு செய்யப்பட்டது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், 41வது நிறுவன
தின விழாவில், தமிழக வேளாண் அமைச்சர் செங்கோட்டையன், திட்ட
ஒருங்கிணைப்பாளர் மாணிக்கத்திடம் விருது வழங்கினார். வேளாண் அறிவியல் நிலைய
உதவி பேராசிரியர் கீதாவுக்கு, சிறந்த வேளாண் விரிவாக்க பணிக்கான விருது
வழங்கப்பட்டது.வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம்
கூறியதாவது:சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகளுக்கு சாகுபடி
தொழில்நுட்ப பயிற்சிகள், பூச்சி நோய் நிர்வாகம், நீர் மேலாண்மை, வேளாண்
பொறியியல், மல்பெரி வளர்த்தல், காளான் வளர்ப்பு, மதிப்பூட்டப்பட்ட
பொருட்கள் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள்
அளிக்கப்படுகிறது.
மாவு பூச்சியை கட்டுப்படுத்த, அசிரோபேகஸ் ஒட்டுண்ணி
உற்பத்தி செய்யப்பட்டு, துணை வேந்தர் முருகேச பூபதி வழங்கினார். சந்தியூர்
வேளாண் அறிவியல் நிலையத்தில், மாவு பூச்சியை கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணி
உற்பத்தி செய்து, 24 ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு,
250 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் விடப்பட்டுள்ளது.வேளாண் அறிவியல்
நிலையத்தில், மொபைல் ஃபோன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. சந்தை
நிலவரம் கேட்டு பதிவு செய்துள்ள, 750 விவசாயிகளுக்கு நாள்தோறும் தகவல்
அனுப்பப்பட்டு வருகிறது. தமிகத்தில் சிறந்த அறிவியல் நிலையமாக சந்தியூர்
வேளாண் அறிவியல் நிலையம் தேர்வு செய்து, மாநில அரசு விருது வழங்கியுள்ளது.