/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டாஸ்மாக் ஊழியர்கள்முதல்வருக்கு நன்றி
/
டாஸ்மாக் ஊழியர்கள்முதல்வருக்கு நன்றி
ADDED : செப் 11, 2011 12:44 AM
பனமரத்துப்பட்டி: டாஸ்மாக் ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு, கூடுதல் விடுமுறை
வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கத்தினர் நன்றி
தெரிவித்தனர்.சேலம் மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் காஜேந்திரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:டாஸ்மாக் ஊழியர்கள் ஏற்றம் பெற மேற்பார்வையாளர்களுக்கு, 500 ரூபாய்,
சேலஸ்மேன்களுக்கு, 400 ரூபாய், உதவியாளர்களுக்கு, 300 ரூபாய் என, முதல்வர்
ஜெயலலிதா சம்பளம் உயர்வு வழங்கி உள்ளார். இதேபோல், டாஸ்மாக் கடைகளுக்கு
கூடுதல் விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம் சார்பில், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. டாஸ்மாக்
ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக முதல்வர் கருணை காட்ட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.