/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழகத்தில் ஸ்பேர் பஸ்கள் இல்லாததால் சிறப்பு பஸ்கள் இயக்க முடியுமா?
/
தமிழகத்தில் ஸ்பேர் பஸ்கள் இல்லாததால் சிறப்பு பஸ்கள் இயக்க முடியுமா?
தமிழகத்தில் ஸ்பேர் பஸ்கள் இல்லாததால் சிறப்பு பஸ்கள் இயக்க முடியுமா?
தமிழகத்தில் ஸ்பேர் பஸ்கள் இல்லாததால் சிறப்பு பஸ்கள் இயக்க முடியுமா?
ADDED : செப் 11, 2011 12:47 AM
தமிழகத்தில், பண்டிகை சீஸன் துவங்கி உள்ள நிலையில், அரசு விரைவு
போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஸ்பேர் பஸ்கள் இல்லாததால், சிறப்பு
பஸ்களின் இயக்கம்
தடை பட்டுள்ளது. இதனால் பண்டிகை நாளில் தங்களின் சொந்த ஊருக்கு செல்லும்
பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும், தமிழக விரைவு போக்குவரத்துக்
கழகத்துக்கு, முக்கிய நகரங்களில், 23 கிளை டெப்போக்கள் செயல்படுகின்றன.
இந்த டெப்போக்களில் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள், அல்ட்ரா டீலக்ஸ்,
சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் என, 920 பஸ்கள் இயக்கப்பட்டன. தி.மு.க.,
ஆட்சியில் பஸ்களை பராமரிப்பு செய்வதற்கு போது மான அளவு உதிரிபாகங்கள் கொள்முதல் செய்ய
நிதி உதவி வழங்கப்பட வில்லை.இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட, 520 அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் பாடாவதி நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த பஸ்களில் பல இயக்க முடியாத நிலையை எட்டியது.
இதை அடுத்து தமிழகத்தின் அனைத்து விரைவு போக்குவரத்துக் கழக
டெப்போக்களிலும் உதிரிபாகங்கள் இல்லாமல், 50 சதவீத பஸ்கள்
ஓரங்கட்டப்பட்டது. அத்துடன்
படாவதியான சூப்பர் டீலக்ஸ் பஸ்களில், 66 பஸ்கள் இயக்க முடியாத நிலையை
எட்டியதை அடுத்து அவை கழிக்கப்பட்டன.டிரைவர்களிடம் டீஸல் சிக்கனத்தையும்,
கன்டக்டர்களிடம் வசூலை அதிகரிக்க கோரி டார்ச்சர் செய்யும் அதிகாரிகள்
பயணிகளின் நலனை புறந்தள்ளி விட்டனர். டயர் உள்ளிட்ட உதிரிபாகங்கள்
டிப்போக்களில்
போதிய இருப்பு வைக்கப்படாததால், ஓடிக் கொண்டு இருக்கும் ஓர் பஸ்ஸில்
இருந்து கழற்றி மற்ற பஸ்க்கு பொறுத்தப்படும் அவலம் அரங்கேறி வருகிறது.
நெடுந்தூர பஸ்கள் பாதி வழியில் செல்லும் போது பழுதாகி பயணிகளை அல்லல் படும்
கதை தினம் தோறும் அரங்கேறியது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களின் நிலை இப்படி
என்றால், சூப்பர் டீலக்ஸ் பஸ்களின் நிலை இதை விட மோசம்.கடந்த 2010ல் விரைவு
போக்குவரத்துக் கழகத்து, 200 சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் (லக்சூரி கோச்)
வழங்கப்ப
டும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை, 50 சதவீத பஸ்கள் மட்டுமே
வழங்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதி தேதி முடிந்த
பஸ்களும் இயக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்
ஏற்பட்டதை அடுத்து, முதல் கட்டமாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்
கழகத்துக்கு, 66 புதிய பஸ்கள் வழங்க அரசு உறுதி அளித்து, கடந்த மாதம், 44 புதிய பஸ்கள்
வழங்கப்பட்டு உள்ளது. இந்த பஸ்கள் தற்போது வழித்தடங்களில் இயக்கப்பட்டு
வருகிறது.அத்துடன் முதல் முறையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, 103
கோடி ரூபாயை அரசு ஒதுக்கி கொடுத்தது. அதன் பயனாக தற்போது பஸ்களுக்கான டயர், டியூப் உள்ளிட்ட உதிரிபாகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து
கிளைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நிதி உதவி வழங்கிய போதும், பஸ்கள்
அனைத்தும் நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு விட்டதால், அவற்றை
சரி செய்யும் பணிகள் இன்னும் முழுமை பெற வில்லை. இதனால் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் சிறப்பு பஸ்கள் இயக்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.அக்டோபர் 6ம் தேதி சரஸ்வதி பூஜையை தொடர்ந்து, அக்டோபர் 26ம்
தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை காலங்களில் வடமாவட்டங்களில்
இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம்.அக்டோபர் 16ம் தேதி வரையில் அனைத்து அரசு விரைவுப் போக்குவரத்துக்
கழக பஸ்களின் முன்பதிவு வந்து விட்டது. அரசு பஸ்ஸில் நிலை இது என்றால், ஆம்னி பஸ்கள், ரயில்களில் அக்டோபர் 30ம் தேதி வரை அனைத்து முன்பதிவும்
முடிவுக்கு வந்து உள்ளது.அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தையே முழுமையாக
நம்பி இருக்க வேண்டிய நிலை பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அரசு விரைவுப்
போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக புதிய பஸ்களை வழங்க வேண்டும்.
பழுது பார்க்காமல் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களை இயக்க
தேவையான நடவடிக்கையை அரசு போர்க்கால அடிப்படையில் மேற் கொள்ள வேண்டும்.
-நமது சிறப்பு நிருபர்-