ADDED : செப் 12, 2011 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி:இடைப்பாடியில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.இடைப்பாடி
டெக்ஸ் சிட்டி அரிமா சங்கமும், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும்
இணைந்து, இலவச கண் சிகிச்சை முகாம், இடைப்பாடி அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. முகாமை, அரிமா சங்க தலைவர் வையாபுரி
துவக்கி வைத்தார். செயலாளர் பாலசுப்ரமணி, முன்னாள் தலைவர்கள் மகாவிஷ்ணு,
கபிலன், பொருளாளர் சந்திரன், ஆசிரியர் வெங்கட்பெருமாள் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர்.
முகாமில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து
கொண்டவர்களில், 432 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.