ADDED : செப் 12, 2011 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: உள்ளாட்சி தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் சார்பில் நிர்வாகிகளிடம்
இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
சேலம் அம்மாபேட்டையில்
உள்ள அ.தி.மு.க., மாநகர் மாவட்ட அலுவலகத்தில், மனுக்கள் பெறப்பட்டு
வருகின்றன.சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில்
போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் சகாதேவன், மாநில
இளைஞர் பாசறை நிர்வாகி விஷ்ணுபிரபுவிடம், விருப்ப மனுவை வழங்கினார்.
அதேபோன்று, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., கண்ணன் மகள் சுதாவும், மேயர்
பதவிக்கு போட்டியிட விருப்ப மனு வழங்கினார்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,
செல்வராஜ் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.