/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிதம்பரம் பிறந்த நாள்: கோவிலில் சிறப்பு பூஜை
/
சிதம்பரம் பிறந்த நாள்: கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : செப் 17, 2011 03:18 AM
சேலம்: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று
காங்கிரஸார், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று மாநில
காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் தலைமையில், சேலம்
சுகவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. மத்திய
அரசின் சாதனைகளை விளக்கி, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலையில்
இருந்து, காங்கிரஸார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி
நடத்தினர்.நிகழ்ச்சியில், விவசாய அணி மாநில துணை தலைவர் சதாசிவம், தெற்கு
தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தினகரன், நாகராஜ், மோகன்ராஜ், சரவணன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.