ADDED : செப் 17, 2011 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கருப்பூர், கரும்பலை அருகே ஹரே கிருஷ்ணா கோவிலில், இஸ்கான்
இளைஞர் விழா, நாளை காலை 10.30 மணியளவில் துவங்குகிறது.
விழாவில், ஆன்மிக
இசை, நாடகம், விஞ்ஞான படக்காட்சி, கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள்
நடக்கிறது.இதில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்
கலந்து கொள்கின்றனர். பிற்பகல் 1 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.
அனைவருக்கும் பிரசாத விருந்து வழங்கப்படுகிறது.இதில், அனைத்து இளைஞர்களும்
கலந்து கொள்ளுமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் தகவல்
பெற விரும்புவோர், 97107 72621 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.