/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் தாக்குதல்நிர்வாகிகளிடம் ஆர்.டி.ஓ., விசாரணை
/
போலீஸ் தாக்குதல்நிர்வாகிகளிடம் ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : செப் 17, 2011 03:20 AM
சேலம்: சேலத்தில், போலீஸ் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைக்காக
மருத்துவமனைக்கு சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளிடம்,
ஆர்.டி.ஓ., நேரடியாக விசாரணை நடத்தினார்.சேலத்தில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனையை செயல்படுத்தக்கோரி நடைபயணம் மேற்கொண்ட இந்திய ஜனநாயக வாலிபர்
சங்கத்தினர், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை
கலைக்க, போலீஸார் தடியடி நடத்தினர்.தாக்குதலில் காயமடைந்த காளிதாஸ் (33),
முத்துகண்ணன் (38), கதிர்வேல் (30), குணசேகரன் (40), புரு÷ஷாத்தமன் (23),
சதிஷ்குமார் (22) உள்பட, 10 பேர் சிகிச்சை பெறுவதற்காக, சேலம் அரசு
மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை
அளிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், தாக்குதல்
குறித்து நேரில் விசாரணை நடத்த, சேலம் ஆர்.டி.ஓ., பிரசன்னராமசாமி
தலைமையில், தாசில்தார் குமரேசன் மற்றும் வருவாய் துறையினர், அரசு
மருத்துவமனைக்கு சென்றனர்.
மருத்துவமனை வளாகத்தில், சிகிச்சைக்காக காத்திருந்தவர்களிடம் விசாரணை
நடந்தது. அப்போது, பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் கேவலமாக பேசி,
லத்தியால் தாக்கியதாக கூறி, உடலில் ஏற்பட்வ காயங்களை காண்பித்தனர். அதன்
பின்னும், சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முன்வரவில்லை. தாக்குதலுக்கு
உள்ளானவர்கள், சிகிச்சை அளிக்கக்கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டதால்,
பதட்டம் ஏற்பட்டது. அதன் பிறகே சிகிச்சை அளிக்க டாக்டர்கள் ஒப்புகொண்டனர்.
அதனால், பிரச்னை முடிவுக்கு வந்தது.