/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரத்தில் ஆட்டோ மோதிவிபத்து: இருவர் பலி
/
மரத்தில் ஆட்டோ மோதிவிபத்து: இருவர் பலி
ADDED : செப் 19, 2011 02:06 AM
இடைப்பாடி: சங்ககிரி அருகே புளியமரத்தின் மீது மினி ஆட்டோ மோதி
விபத்துக்குள்ளானது. இதில், இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
திருச்செங்கோடு அருகே உள்ள காடச்சநல்லூர், அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்
செல்வம் மகன் நித்தியானந்தம்(27). இவர், கறிக்கோழிகளை மினி ஆட்டோவில்
ஏற்றிக்கொண்டு, சங்ககிரியில் இருந்து திருச்செங்கோடு நோக்கிச்
சென்றுள்ளார். நாரணப்பன் சாவடி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மினி
ஆட்டோ, ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி
விபத்துக்குள்ளானது.விபத்தில், ஆட்டோ டிரைவர் நித்தியானந்தம்(27), மினி
ஆட்டோவில் பயணம் செய்த திருச்செங்கோடு மலையடிவாரம் பகுதியை சேர்ந்த
கோவிந்தன் மகன் வெங்கடேசன்(22) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே
பலியாகினர்.மேலும், ஆட்டோவில் சென்ற திருச்செங்கோடு அருகே உள்ள
குமாரமங்கலம் நாடார் தெருவை சேர்ந்த குழந்தைவேல் மகன் தனசேகரன்(23) பலத்த
காயமடைந்தார். சங்ககிரி இன்ஸ்பெக்டர் ஆரோக்யராஜ் வழக்கு பதிவு செய்து,
விசாரணை நடத்தி வருகிறார்.

