/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விவகாரம்அ.தி.மு.க., வினர் மூன்று பேர் அதிரடி நீக்கம்
/
கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விவகாரம்அ.தி.மு.க., வினர் மூன்று பேர் அதிரடி நீக்கம்
கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விவகாரம்அ.தி.மு.க., வினர் மூன்று பேர் அதிரடி நீக்கம்
கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விவகாரம்அ.தி.மு.க., வினர் மூன்று பேர் அதிரடி நீக்கம்
ADDED : செப் 22, 2011 01:53 AM
சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி, அ.தி.மு.க., பகுதி செயலாளர் சண்முகம்
விவகாரத்தில், அ.தி.மு.க., வினர், 3 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
செய்யப்பட்டுள்ளார்.
சேலம் கொண்டலாம்பட்டி, அ.தி.மு.க., பகுதி செயலாளராக சண்முகம் இருக்கிறார்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில், வார்டு மாறி கவுன்சிலர் தேர்தலில்
போட்டியிட்டார். அ.தி.மு.க., வினரின் அதிருப்தியால் தோல்வியை சந்தித்தார்.
வரும் தேர்தலிலும், 54, 58 ஆகிய இரண்டு வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு
வழங்கியுள்ளார்.
சண்முகத்தின் இந்த நடவடிக்கை, அ.தி.மு.க., வினர் மத்தியில் கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியது. சண்முகத்துக்கு சீட் வழங்க கூடாது என்ற
கோரிக்கையை வலியுறுத்தி, சில நாட்களுக்கு முன் அமைச்சர் இடைப்பாடி
பழனிசாமியின், வீட்டை, அ.தி.மு.க., வினர் முற்றுகையிட்டனர்.நேற்று
முன்தினம் சென்னைக்கு நேரில் சென்று, கட்சி தலைமை அலுவலகத்தில் கோரிக்கை
மனு அளித்து திரும்பினர். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால்,
சண்முகத்தின் மீது கட்சி தலைமை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சண்முகம் விவகாரத்துக்கு எதிர்ப்பு கொடி
பிடித்த, கொண்டலாம்பட்டி பகுதி ஜெயலலிதாபேரவை துணை தலைவர் கறிக்கடை பழனி,
கொண்டலாம்பட்டி எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் குப்புசாமி, 58 வது வட்ட ஜெயலலிதா
பேரவை செயலாளர் விஸ்வநாதன் ஆகிய மூன்று பேர் நேற்று முன்தினம் இரவு
கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க., வை
சேர்ந்த மூன்று பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது,
கொண்டலாம்பட்டி பகுதி, அ.தி.மு.க., வினர் இடையே கலக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது. சண்முகத்தின் மீது புகார் அளித்து வந்தவர்கள் மீது
கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதால், கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ந்து
தலைமைக்கு, 'புகார்' அனுப்பி வருபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.