ADDED : செப் 22, 2011 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, சேலம் மாநகராட்சி தேர்தல்
பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களுக்கும், மூன்று கட்டமாக பயிற்சி அளிக்க
திட்டமிடப்பட்டுள்ளது.
சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட அனைத்து
வார்டுகளுக்கும் சோனா தியாகராஜ பாலிடெக்னிக் கல்லூரியிலும், அஸ்தம்பட்டி
மண்டலத்துக்குட்பட்ட வார்டுகளுக்கு சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கலலூரியிலும்,
அம்மாப்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட வார்டுகளுக்கு இந்திய கைத்தறி
தொழில்நுட்ப நிறுவனத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட
வார்டுகளுக்கு சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியிலும் பயிற்சி நடக்கிறது.