sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை

/

இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை

இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை

இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை


ADDED : செப் 22, 2011 01:55 AM

Google News

ADDED : செப் 22, 2011 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகரில், முக்கியமான சாலைகளில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கலெக்டர் மகரபூஷணம் உத்தரவிட்டார்.சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் மகரபூஷணம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சாரதா கல்லூரி சாலையில், சென்டர் மீடியன் அமைப்பதற்கு உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் வரவேற்றும், அமைக்கக்கூடாது என மற்றொரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி, கல்லூரி துவங்கும்போது, மாணவ மாணவியரை அழைத்து வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்த, பள்ளியின் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்களை பயன்படுத்தலாம். வணிக வளாகங்களின் முன்பகுதியில், அதிகப்படியான வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அந்தந்த வணிக வளாக உரிமையாளர்கள், வாகனங்கள் நிறுத்த இடங்களை அமைத்து கொடுக்க வேண்டும்.நெரிசல் மிகுந்த சாலைகளில், இரு புறமும் வாகனங்களை நிறுத்தி விடுவதால், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் உள்ளதைப்போல், தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தினால், அந்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் புறவழிச்சாலையில், சர்வீஸ் ரோடு பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும். ஓமலூர் டோல்கேட்டை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கருத்துக்களை, உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:கடந்த சாலை பாதுகாப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட, பல்வேறு கருத்துக்களின் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பழுதடைந்த சிக்னல்கள் சரி செய்யப்பட்டுள்ளது. மரவனேரி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் மாநகராட்சியால் சரி செய்யப்பட்ட போதும், மழை காரணமாக மீண்டும் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொசுத் தொல்லையை போக்க, மாநகராட்சி முழுவதும் மருந்து அடிக்க வேண்டும். சுற்றித்திறியும் பன்றிகளை அப்புறப்படுத்த மாநகராட்சி மூலம் அறிவிப்பு வெளியிட வேண்டும். நாய், குதிரைகளை பிடித்துச் செல்லவும், அவற்றை பாதுகாக்கவும், மாநகராட்சியில் இடம் உள்ளதா, அதற்கென தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்தும் மாநகராட்சியிடம் கேட்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலையில், சர்வீஸ் ரோடுகளில் வாகனங்கள் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வணிக வளாகங்கள் முன் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை போலீஸார் அப்புறப்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.போலீஸ் எஸ்.பி., பாஸ்கரன், துணை கமிஷனர் சத்யபிரியா, ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us