நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலத்தில் அன்பு வழி கல்விப்பணி அறக்கட்டளை, அகில இந்திய தமிழ் சங்கம், சோழா அகாடமி, தமிழ்நாடு மின் அமைப்-பாளர் சங்கம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழாவை நேற்று நடத்தின.
பா.ம.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் , 131 மாற்றுத்திறனாளிகளுக்கு, தீபாவளி வாழ்த்து தெரிவித்து, புத்தாடைகளை வழங்கினார். தமிழ் சங்க தலைவர் கோவிந்தராஜ், மின் அமைப்பாளர் மத்திய சங்க தலைவர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.