/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலியல் தொல்லை தந்த வாலிபரை நெல்லையில் பிடித்த சேலம் போலீஸ்
/
பாலியல் தொல்லை தந்த வாலிபரை நெல்லையில் பிடித்த சேலம் போலீஸ்
பாலியல் தொல்லை தந்த வாலிபரை நெல்லையில் பிடித்த சேலம் போலீஸ்
பாலியல் தொல்லை தந்த வாலிபரை நெல்லையில் பிடித்த சேலம் போலீஸ்
ADDED : அக் 28, 2025 01:49 AM
சேலம், சேலம், புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மேம்பாலத்தில் கடந்த, 25ம் தேதி காலை, 7:00 மணிக்கு நடந்து சென்ற வாலிபரிடம், மூன்று பேர் சேர்ந்து அவரை தாக்கி மொபைல்போனை பறித்து சென்றனர். இது குறித்து, பள்ளப்பட்டி போலீசில் மொபைல்போன் பறி கொடுத்தவர் புகார் அளித்தார். அதில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ், 30, என்பதும் தச்சு தொழில் செய்து வருவதாகவும், சேலத்தில் நண்பரை பார்க்க வந்தபோது, மொபைல் பறிப்பு சம்பவம் நடந்ததாக கூறியிருந்தார்.
புகார்படி, தச்சு தொழிலாளியை தாக்கிய மூன்று வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், இன்ஸ்டாகிராம் வீடியோ கேமில் சுரேஷ் என்பவர் அறிமுகமாகி, மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், சேலத்திற்கு வரவழைத்து மொபைல்போனை பறித்து உடைத்ததாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில், புகார் அளித்த தச்சு தொழிலாளியின் உண்மையான பெயர் பிரம்மநாயகம், 30, என்பது தெரியவந்தது. இன்ஸ்டாகிராமில், சுரேஷ் என்ற பெயரில் கணக்கு துவங்கி பள்ளி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பி, பாலியல் தொல்லை தந்தது தெரிய வந்தது. புகார் அளித்த பிரம்மநாயகத்தை பிடிக்க, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நெல்லை சென்றனர். அங்கு பதுங்கி இருந்த பிரம்மநாயகத்தை பிடித்து, நேற்று காலை சேலம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவியிடம் இருந்தும் புகாரை பெற்று, பிரம்மநாயகம் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

