/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கண்டுகொள்ளப்படாத வேளச்சேரி சுரங்கப்பாதை 15 ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் அலட்சியம் மாநகராட்சி வசம் ஒப்படைக்க எதிர்பார்ப்பு

ADDED : அக் 28, 2025 12:55 AM

வேளச்சேரி: வேளச்சேரி சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, 15 ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வேளச்சேரி - பெருங்குடி ரயில் நிலையம் இடையே, தண்டவாளத் தின் கீழ் பகுதியில், இருவழி சுரங்கப்பாதை உள்ளது. வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை சுற்று வட்டார பகுதிகளை இணைக்கும் வகையில், இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
சிற்றுந்து, வேன், கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் நடக்க தனி பாதையும் உள்ளது. ரயில்வே பராமரிப்பில் உள்ள இந்த சுரங்கப் பாதையை, மழைக்காலத்தில் முறையாக கண்காணிப்பதில்லை.
சுரங்கப்பாதையில் வெள்ளம் தேங்கும்போது, வாகனங்கள் செல்வதை தடுக்க போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. வெள்ளம் தானாக வடிந்த பின், போக்குவரத்து சீராகும்.
இதனால், மழையை பொறுத்து, மூன்று மாதங்கள் வரை சுரங்கப்பாதை மூடிக்கிடக்கும். இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், குளம் போல் தேங்கி நின்ற வெள்ளத்தில் மூழ்கி, சிலர் பலியாகினர். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், பெரும்பாலானவை ரயில்வே சுரங்கப்பாதையாக உள்ளன. இதை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பராமரிக்கிறது.
அதேபோல், வேளச்சேரி ரயில்வே சுரங்கப் பாதையையும், மேற்கண்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வேளச்சேரியை சேர்ந்த குமாரராஜா என்பவர் கூறியதாவது:
சுரங்கப்பாதை பராமரிப்பு மற்றும் கண்காணிப்பை, 15 ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மழையின்போது, மூடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சாதாரண மழைக்கு தேங்கும் வெள்ளமும், தானாக வடிந்தால் தான் திறக்கப்படும். இதர பகுதிகள் சகஜ நிலைக்கு திரும்பினாலும், இந்த சுரங்கப்பாதையை திறக்க, 15 நாட்களுக்கு மேல் ஆகும்.
இதனால், இந்த சுரங்கப்பாதையை மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்தால், மழைநீரை மோட்டார் வைத்து விரைந்து வெளியேற்றுவதுடன், முறையாக கண்காணிக்கப்படும். வாகன போக்குவரத்தும் சீராகும்.
இவ்வாறு அவர் கூறினார்.