/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் ரயில்வே கோட்ட வருவாய் 12 சதவீதம் உயர்வு
/
சேலம் ரயில்வே கோட்ட வருவாய் 12 சதவீதம் உயர்வு
ADDED : ஜன 27, 2024 03:58 PM
சேலம் : சேலம் ரயில்வே கோட்ட வருவாய், 12.72 சதவீதம் உயர்ந்துள்ளது.குடியரசு தினத்தையொட்டி சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நேற்று தேசிய கொடியேற்றி, மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா பேசியதாவது:சேலம் ரயில்வே கோட்டம் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து பயணிக்கிறது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, கடந்த நிதியாண்டின் இதேகால கட்ட வருவாயை விட, 12.72 சதவீதம் உயர்ந்துள்ளது. புதிதாக கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டதோடு, ஈரோடு - நெல்லை முன்பதிவற்ற ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை - பொள்ளாச்சி இடையே கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்படுகிறது.சேலம் கோட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை, 9 இடங்களில் ரயில்வே சுரங்கப்பாதை, 33 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புகளூர், லாலாப்பேட்டை, குளித்தலை, புக்கரவாரி, முகாசபரூர் ஆகிய ஸ்டேஷன்களின் நடைமேடைகளின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணியர் மேம்பாட்டுக்கு, கோட்டம் முழுதும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.இதில் கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம், முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, இயக்க மேலாளர் அனித் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

