/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவர்களை கால் அமுக்க வைத்த சம்பவம்; அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
/
மாணவர்களை கால் அமுக்க வைத்த சம்பவம்; அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
மாணவர்களை கால் அமுக்க வைத்த சம்பவம்; அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
மாணவர்களை கால் அமுக்க வைத்த சம்பவம்; அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
ADDED : நவ 22, 2024 08:58 PM

சேலம்: சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை மசாஜ் செய்ய வைத்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது கிழக்கு ராஜபாளையம். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஜெயபிரகாஷ் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளி மாணவர்களை தமது கால்களை அமுக்கிவிட கூறியுள்ளார்.
ஆசிரியர் கூறியதால் மாணவர்களை அதை தட்ட முடியாமல் கால்களை அமுக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதோடு கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், புகாருக்கு ஆளான ஆசிரியர் ஜெயபிரகாஷை சேலம் மாவட்ட தலைமை கல்வி அலுவலகர் ஷபீர் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆசிரியருக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளார்.