ADDED : மே 06, 2024 02:46 AM
'கியர்' சைக்கிள்
திருடியவர் கைது
சங்ககிரி,: சங்ககிரி ஆர்.எஸ்.பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் பிச்சைமுத்து. அவருக்கு சொந்தமான, 'கியர்' சைக்கிளை, சங்ககிரி பயணியர் விடுதி சாலையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் நிறுத்தியிருந்தார். நேற்று அந்த சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து உறவினர் தகவல்படி, ஆசிரியர், சங்ககிரி போலீசில் நேற்று புகார் செய்தார். அவர்கள் விசாரித்ததில், சேலம், கொண்டலாம்பட்டி, அரசமரத்துகாட்டூரை சேர்ந்த மணிகண்டன், 25, திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
7 பவுன், 'லேப் - டாப்'விவசாயி வீட்டில் திருட்டு
சங்ககிரி: மகுடஞ்சாவடி அருகே வைகுந்தம், மேட்டுக்காட்டை சேர்ந்த, விவசாயி சண்முகசுந்தரம். இவர் நேற்று முன்தினம் இரவு, அவரது மனைவியுடன் வீட்டின் மேல்மாடியில் துாங்கியுள்ளார். அவரது பெற்றோர், வீட்டுக்கு வெளியே படுத்துள்ளனர்.
நேற்று அதிகாலை சண்முசுந்தரம் எழுந்தார். அப்போது, வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த சங்கிலி, தோடு என, 7 பவுன் நகைகள், லேப்டாப், மொபைல் போன் ஆகியவை திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.