ADDED : மே 16, 2024 03:25 AM
இன்று, நாளை குடிநீர் சப்ளை 'கட்'
தாரமங்கலம்: குடிநீர் வடிகால் வாரியம், சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டம் மூலம், தாரமங்கலம் நகராட்சிக்கு குடிநீர் வினியோகிக்கபடுகிறது. இதில் நங்கவள்ளி, பாலகனுாரில், குடிநீர் வடிகால் வாரிய பிரதான குழாயில் உடைப்பு ஏற்றப்பட்டுள்ளது.
இதனால் தாரமங்கலம் நகராட்சியின் சில பகுதிகளில், இன்று, நாளை குடிநீர் வினியோகம் இருக்காது என, நகராட்சி பொறியாளர் பிரேமா தெரிவித்துள்ளார்.
தோட்டக்கலை மாணவியர் விழிப்புணர்வுபனமரத்துப்பட்டி: திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லுாரி, ஆராய்ச்சி நிலைய மாணவியர், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்துடன் இணைந்து ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
நேற்று பனமரத்துப்பட்டி விவசாயிகளிடம், மீன் கழிவை பயன்படுத்தி, பயிர் வளர்ச்சி ஊக்கியான மீன் அமிலம் தயாரித்தல், அதன் பயன் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒருங்கிணைந்த பண்ணையம், அதன் நன்மைகள்
பற்றியும் விளக்கினர்.