ADDED : ஜூன் 27, 2024 03:43 AM
19 - 19ம் காதல்
மாணவர் திருமணத்துக்கு
போலீஸ் மறுப்பு
சேலம்: சேலம், அன்னதானப்பட்டியை சேர்ந்தவர், 19 வயது மாணவி. தாயை இழந்த அவர், கல்லுாரியில், 2ம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 20ல் கல்லுாரி சென்ற அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர். நேற்று முன்தினம் அந்த மாணவி, அவருடன் படிக்கும், 19 வயது மாணவருடன், போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார். இருவரும் காதலிப்பதாக தெரிவித்தனர். பெண்ணுக்கு திருமண வயதான நிலையில், காதலனுக்கு, 19 வயது என்பதால் திருமணம் செய்து வைக்க போலீசார் மறுத்துவிட்டனர். உறவினர்களுடன் செல்ல மறுத்த மாணவி, மாணவரின் பெற்றோருடன் செல்வதாக கூறி சென்றார்.
மூதாட்டி இறப்பு
வழக்கில் மாற்றம்
சேலம்-
சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சின்னதங்கம், 65. கடந்த மாதம் வீட்டில் தனியே இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த ஒருவர், பேச்சு கொடுத்து, அவர் அணிந்திருந்த, 8 பவுன் நகையை பறித்தார். தடுக்க முயன்ற சின்ன தங்கத்தை தள்ளிவிட்டு வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த சின்ன தங்கம், தனியார் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டார். சூரமங்கலம் போலீசார் விசாரித்து, செம்பட்டியூரை சேர்ந்த அரவிந்த், 23, என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் சின்னதங்கம் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் போலீசார், கொலை வழக்காக மாற்றி விசாரிக்கின்றனர்.
மயானத்தில் சாராயம்
விற்றவர் கைது
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசார் நேற்று நடுவலுார், மோட்டூரில் ஆய்வு செய்தனர். அப்போது, மயான பகுதியில் உள்ள முட்புதரில் கள்ளச்சாராயம் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட, அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன், 48, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம், 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.