/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் உருக்காலை தொழிலாளர் 29, 30ல் வேலை நிறுத்தம்
/
சேலம் உருக்காலை தொழிலாளர் 29, 30ல் வேலை நிறுத்தம்
ADDED : ஜன 15, 2024 10:19 AM
சேலம்: இந்திய உருக்கு ஆணையம் கட்டுப்பாட்டில் சேலம் உருக்காலை உள்பட, 9 ஆலைகள் உள்ளன. இதில், 72,000 நிரந்தர தொழிலாளர், லட்சத்துக்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர் பணிபுரிகின்றனர். இவர்களின் கோரிக்கை, 2 ஆண்டுகளாக நிறைவேற்றாததால் வரும், 29, 30ல், வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் உருக்காலை ஐ.என்.டி.யு.சி., பொதுச்செயலர் ராமலிங்கம் கூறியதாவது: எஃகு ஆலைகளுக்கு தேசிய கூட்டுக்குழு, ஊதியத்தை திருத்தம் செய்து, 39 மாதங்களுக்கு நிலுவைத்தொகையை உடனே வழங்குதல்; போனஸ் திட்டத்தை மாற்றியமைத்தல்; புது பதவி, கூடுதல் கிரேடுகளை உருவாக்குதல்; புது ஊக்கத்திட்டம் கொண்டு வருதல் உள்பட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 29, 30ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்.
சேலத்தில், ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எல்.எல்.எப்., பி.டி.எஸ்., ஏ.டி.பி., ஆகிய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து, கடந்த, 12ல் நிர்வாகத்திடம், வேலை நிறுத்த, 'நோட்டீஸ்' வழங்கிவிட்டோம். திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும். அதற்குள் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, இந்திய உருக்கு ஆணையம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.