/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம்
/
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம்
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம்
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஜூன் 10, 2025 01:05 AM
சேலம், சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது.
சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில், வைகாசி திருவிழா கடந்த, 31ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை இரு வேளை சுகவனேஸ்வரருக்கும், சொர்ணாம்பிகை அம்மனுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருவீதி உலா நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது.
இதை முன்னிட்டு சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு பட்டாடை உடுத்தி, பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சேலம் ராஜகணபதி கோவில் அருகே வைக்கப்பட்ட தேருக்கு, வண்ண வண்ண மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் எழுந்தருளினர்.சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க அர்ச்சனை நடந்தது. பின் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன், அறங்காவல் குழு தலைவர் சோனா வள்ளியப்பா, மேயர் ராமசந்திரன் மற்றும் பலர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
தேரோட்டம் துவங்கியதும், அங்கு கூடியிருந்த பக்தர்கள் நமச்சிவாயா, நமச்சிவாயா என விண்ணை முட்டும் அளவிற்கு கோஷம் எழுப்பி பாட்டுப்பாடி, நடனமாடி வாத்தியங்கள் முழங்கியவாறு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ராஜகணபதி கோவிலில் இருந்து தொடங்கி, இரண்டாவது அக்ரஹாரம், சின்னக்கடை வீதி, முதல் அக்ரஹாரம் வழியாக பவனி வந்து, மீண்டும் ராஜகணபதி கோவிலை வந்தடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு, தேர் செல்லும் சாலை முழுதும் குறுக்கே உள்ள மின்கம்பிகள் அகற்றப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.