/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.1.34 கோடிக்கு விற்பனை
/
மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.1.34 கோடிக்கு விற்பனை
ADDED : டிச 01, 2024 01:35 AM
மாவட்ட உழவர் சந்தைகளில்
ரூ.1.34 கோடிக்கு விற்பனை
சேலம், டிச. 1-------
கார்த்திகை அமாவாசையால் சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில், 1.34 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அம்மாபேட்டை, ஆத்துார், இடைப்பாடி உள்பட, 13 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. கார்த்திகை அமாவாசையான நேற்று, உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க மக்கள் கூட்டம் காணப்பட்டது. வழக்கத்தைவிட காய்கறி, பழங்கள், கீரைகள் விற்பனை அதிகம் நடந்தது.
அதில் தக்காளி கிலோ, 45 முதல், 50 ரூபாய், உருளைக்கிழங்கு, 50 - 70, சின்னவெங்காயம், 50, பெரிய வெங்காயம், 85 - 90, பச்சை மிளகாய், 26, கத்திரிக்காய், 24 - 30, வெண்டைக்காய், 48, முருங்கைக்காய், 160, பீன்ஸ், 72 - 86, அவரை, 56 - 66, கேரட், 80 - 92, கொய்யா பழம், 40 - 50, மாதுளை, 160 - 200, சாத்துக்குடி, 80 ரூபாய்க்கு விற்பனையானது. 13 உழவர் சந்தைகளுக்கு, காய்கறி, பழங்கள், பூக்கள், பிற வகைகள் என, 302.60 டன் மூலம், 1.34 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அதிகபட்சமாக சூரமங்கலம் சந்தையில், 23.64 லட்சம் ரூபாய், குறைந்தபட்சம் மேச்சேரியில், 2.01 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.