/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்களிடம் அரசு வேலைக்கு போலி உத்தரவு வழங்கல் ரூ.4.50 லட்சம் சுருட்டிய சலுான் கடைக்காரர் கைது
/
பெண்களிடம் அரசு வேலைக்கு போலி உத்தரவு வழங்கல் ரூ.4.50 லட்சம் சுருட்டிய சலுான் கடைக்காரர் கைது
பெண்களிடம் அரசு வேலைக்கு போலி உத்தரவு வழங்கல் ரூ.4.50 லட்சம் சுருட்டிய சலுான் கடைக்காரர் கைது
பெண்களிடம் அரசு வேலைக்கு போலி உத்தரவு வழங்கல் ரூ.4.50 லட்சம் சுருட்டிய சலுான் கடைக்காரர் கைது
ADDED : பிப் 13, 2025 03:23 AM
மேட்டூர்: இரு பெண்களிடம், அரசு வேலைக்கு போலி உத்தரவு வழங்கி, 4.50 லட்சம் ரூபாய் சுருட்டிய, சலுான் கடைக்காரரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர், கருமலைக்கூடல், சுப்ரமணிய நகரை சேர்ந்தவர் சக்திவேல், 42. இவர் சேலம் நீதிமன்றத்தில், டீ, தின்-பண்டம் விற்க ஒப்பந்தம் எடுத்து பணிபுரிகிறார். இவரது மனைவி தீபிகா, 38. சக்திவேல் வீடு அருகே, தீபிகாவின் சகோ-தரி தேன்மொழி, 42, வசிக்கிறார்.
சேலம், கருப்பூர், வெள்ளாளப்பட்டி, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 28. முடிதிருத்தகம் வைத்துள்ளார். இவர் ஏற்க-னவே, வெளியே சந்தித்து அறிமுகமானதன் அடிப்படையில், 2023ல், சக்திவேல் வீட்டுக்கு சென்றார். ஆனால் அப்போது, 'நான் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரியாக உள்ளேன். அரசு துறையில் வேலை வாங்கி தருகிறேன்' என, தீபிகா, தேன்-மொழியிடம் கூறினார். தொடர்ந்து தீபிகாவிடம், 2.50 லட்சம், தேன்மொழியிடம், 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கேட்-டுள்ளார்.
அதை நம்பி, 2024 ஜூன், 16ல் இருவரும், 25,000 முன்பணம் கொடுத்தனர். தொடர்ந்து மீதி பணத்தை, கூகுள் பே, வங்கி பரி-வர்த்தனை, ரொக்கமாக கொடுத்தனர். இறுதியாக ஆக., 23ல் மொபைலில் பணம் கொடுத்த இருவரிடமும், 'தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் இருந்து உங்கள் வேலைக்கான உத்தரவு வந்-துவிட்டது' என கூறியுள்ளார். தொடர்ந்து உத்தரவை, 'வாட்-ஸாப்'பில் இருவருக்கும் அனுப்பினார். அந்த உத்தரவுடன் இரு-வரும், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கிளர்க் வேலையில் சேர சென்றனர். அப்போதுதான் மணிகண்டன் வழங்கியது போலி உத்தரவு என தெரிந்தது.
மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இருவரும், மணிகண்ட-னிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டனர். அதற்கு மழுப்ப-லாக பதில் அளித்த மணிகண்டன், பணம் தராமல் இழுத்தடித்-துள்ளார். இதுகுறித்து சக்திவேல், சேலம் எஸ்.பி., கவுதம் கோய-லிடம் புகார் செய்தார். அவரது உத்தரவுப்படி நேற்று கருமலைக்-கூடல் போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை கைது செய்-தனர்.

