/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
/
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 16, 2024 10:03 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது.
கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார். தொடர்ந்து தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. பின் உறியடி, கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் பரிசு வழங்கினார்.
பச்சரிசி, திணை, குதிரைவாலி, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு பல்வேறு வகையிலான பொங்கல் செய்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட வெளிநாட்டு பயணிகள், மாட்டு வண்டியில் கலெக்டர் அலுவலகத்தை சுற்றி பயணம் செய்து மகிழ்ந்தனர். அதேபோல் கலெக்டர் பாரம்பரிய உடை அணிந்து மாட்டு வண்டியில் பயணம் செய்து மகிழ்ந்தார்.
மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., சதாசிவம், கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை, டி.ஆர்.ஓ., மேனகா மற்றும் அரசு அலுவலர்கள், முதியோர், குழந்தைகள், துாய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி கலெக் டர் அலுவலகம் மலர்களால், கோலங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவில் அலுவலகம் ஜொலிக்கும் வகையில் வண்ண விளக்குகளை கொண்டும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.--------------------