/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சந்தன காப்பு உற்சவம்: கண்ணாடி மாளிகையில் தாயார்களுடன் பெருமாள்
/
சந்தன காப்பு உற்சவம்: கண்ணாடி மாளிகையில் தாயார்களுடன் பெருமாள்
சந்தன காப்பு உற்சவம்: கண்ணாடி மாளிகையில் தாயார்களுடன் பெருமாள்
சந்தன காப்பு உற்சவம்: கண்ணாடி மாளிகையில் தாயார்களுடன் பெருமாள்
ADDED : மே 18, 2025 05:32 AM
சேலம்: ஆண்டுதோறும் கத்திரி வெயில் காலத்தில், அதன் தாக்கத்தை குறைக்க சிவாலயங்களில் மூலவர் மேல், 'தாரா' பாத்திரம் அமைத்து இடைவிடாது பன்னீர் அபிேஷகம் நடக்கும்படி செய்வர். அதேபோல் விஷ்ணு ஆலயங்களில் மூலவர் பெருமாளை குளிர்விக்க சந்தனகாப்பு செய்வது வழக்கம்.
அதன்படி சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், சுந்தரராஜ பெருமாள் பக்த சபா சார்பில் நேற்று, மூலவர் சுந்தரவல்லி தாயார், அழகிரிநாதருக்கு, 28ம் ஆண்டாக நேற்று சந்தனகாப்பு உற்சவம் நடந்தது.
தாயார், பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து சந்தனகாப்பு அலங்காரத்துடன் பூஜை செய்யப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சுந்தரவல்லி தாயார் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர், சர்வ அலங்காரத்துடன் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளினர். மேலும் சேலம் மாஸ்டர் ஹரிராம் குழுவினரின் பக்தி பாடல் கச்சேரி நடந்தது. பிரபந்த கோஷ்டியினர், சாற்றுமுறை பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று காலை, 8:00 மணிக்கு கோவில் நந்தவனத்தில் பெருமாள் மற்றும் தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு அன்னப்பாவாடை சாற்றுமுறையுடன் சந்தனகாப்பு உற்சவம் நிறைவு பெறும்.