/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கழிவு நீரில் கலக்கும் சாயக்கழிவு ஏரியில் உள்ள பாசியால் சுகாதார சீர்கேடு

ADDED : ஜன 09, 2024 11:38 AM
வீரபாண்டி: ஏரிக்கரையில் தேங்கி படர்ந்துள்ள சாயக்கழிவு பாசியால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், வீரபாண்டி கொப்பம் ஏரிக்கு திருமணிமுத்தாற்றில் இருந்து தண்ணீர் வருவதால், ஆண்டு முழுவதும் ஏரி நிரம்பியிருக்கும். சேலம் நகரில் எங்கு மழை பெய்தாலும், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஆற்றில் விடப்படுவதால் நீர்வரத்து அதிகரிக்கும். இதை பயன்படுத்தி, கரையோரங்களில் செயல்படும் சாய, ரசாயன பட்டறை கழிவுகளை ஆற்றில் கலந்து விடுகின்றனர். சமீபத்தில் வழக்கத்தை விட அதிகளவு கழிவுகள் கலந்ததால், அங்கிருந்து ஏரிக்கு வந்த தண்ணீரில் அடித்து வரப்பட்ட சாயம், ரசாயன கழிவுகள் மேற்பரப்பில் படர்ந்துள்ளது.
இவை வெயிலில் காய்ந்து பசை போல் இறுகி, கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுவட்டார குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மூச்சு விட சிரமப்படுகின்றனர். ஏரியின் உபரிநீர் குடியிருப்புகளின் சாக்கடை வழியாக செல்கிறது. குழந்தைகள் வெளியில் விளையாடும் போது, எதிர்பாராத விதமாக கழிவுநீர் உடலில் பட்டால் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள்
உருவாகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஏரியில் படர்ந்துள்ள கழிவுகளை அகற்றி சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.