/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டவுன் போலீஸ்காரரை கண்டித்து துாய்மை பணியாளர்கள் முற்றுகை
/
டவுன் போலீஸ்காரரை கண்டித்து துாய்மை பணியாளர்கள் முற்றுகை
டவுன் போலீஸ்காரரை கண்டித்து துாய்மை பணியாளர்கள் முற்றுகை
டவுன் போலீஸ்காரரை கண்டித்து துாய்மை பணியாளர்கள் முற்றுகை
ADDED : அக் 11, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாநகராட்சியில் துாய்மை பணியில் ஈடுபடும், 100க்கும் மேற்பட்டோர், நேற்று, டவுன் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள், இன்ஸ்பெக்டர் ஜெகநாதனிடம் மனு அளித்தனர்.
அதில், 'டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணி புரியும் போலீஸ்காரர் ஒருவர், ரோந்து வரும் போது, துாய்மை பணியாளர்களை அவதுாறாக பேசுகிறார். எங்கு பார்த்தாலும் விரட்டுவதோடு, அவமரியாதை செய்கிறார்' என கூறியிருந்தனர்.இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில், துாய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர்.