/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கறுப்பு பேட்ஜ் அணிந்து சார் பதிவாளர்கள் பணி
/
கறுப்பு பேட்ஜ் அணிந்து சார் பதிவாளர்கள் பணி
ADDED : அக் 11, 2025 01:09 AM
சேலம் சேலம் மாவட்டத்தில், துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகம், கிழக்கு, மேற்கு என, இரு மாவட்ட பதிவாளர் அலுவலகம், அதற்கான இரு தணிக்கை அலுவலகம், இரு மாவட்டத்துக்கு உட்பட்ட, 23 சார் பதிவாளர் அலுவலகம் என, 28 அலுவலக பணியாளர்கள், நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு, எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து தமிழக சார் பதிவாளர் சங்க மாநில தலைவர் மகேஷ் கூறியதாவது:
தமிழக பதிவுத்துறை தலைவரை, கடந்த, 8ல் சந்தித்து, பணியாளர் நலன் சார்ந்த கோரிக்கை மனு அளித்தோம்.
அப்போது, 'பலமுறை சந்தித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை' என கேள்வி எழுப்பியதால், நான், பொதுச் செயலர் மணிராஜ், பிரசார செயலர் செல்வராமச்சந்திரன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி, குறிப்பாணை வழங்கப்பட்டது ஏற்புடையதல்ல.
இதனால் தமிழகம் முழுதும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடு கிறோம். பொய் குற்றச்சாட்டு ரத்தாகும் வரை, இது தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.