/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் கோப்பை மாநில கேரம் சென்னை மாணவர்கள் அசத்தல்
/
முதல்வர் கோப்பை மாநில கேரம் சென்னை மாணவர்கள் அசத்தல்
முதல்வர் கோப்பை மாநில கேரம் சென்னை மாணவர்கள் அசத்தல்
முதல்வர் கோப்பை மாநில கேரம் சென்னை மாணவர்கள் அசத்தல்
ADDED : அக் 11, 2025 01:09 AM
சேலம், தமிழகம் முழுதும், 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்களுக்கு, மாநில அளவில் செஸ், கேரம் போட்டி, சேலம் நேரு கலையரங்கில், கடந்த, 4ல் தொடங்கியது.
கல்லுாரி மாணவர் களுக்கு கேரம் போட்டி, நேற்றுடன் நிறைவு பெற்றது. அதில் ஒற்றையரில் சென்னை மாணவர் முஷரப், கோவை மாணவர் அக்ஷய் குமார், காஞ்சிபுரம் மாணவர் நவீன்குமார் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இரட்டையரில், சென்னை முகமது ரஷித்கான், ஸ்ரீமன் ஜோடி; திருச்சி கிேஷார், மரியா சகாய ஜேம்ஸ் ஜோடி; கோவை நவீன் பிரசாத், அக்ஷய்குமார் ஜோடிகள் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
கல்லுாரி மாணவியர் ஒற்றையரில், சென்னை மாணவி கலிமா; திருச்சி மாணவி கனிஷ்கா; சிவகங்கை மாணவி ரக்ஷா ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இரட்டையரில் கோவை சுனித்ரா, சுபர்னா ஜோடி; மதுரை தர்ஷிதா, ஹரிஷ்மா ஜோடி; சிவகங்கை ரக்ஷா, ராஜேஸ்வரி ஜோடிகள் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
முதலிடத்துக்கு, தலா, 1 லட்சம், இரண்டாம் இடத்துக்கு, 75,000, மூன்றாம் இடத்துக்கு, 50,000 ரூபாயுடன், தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டன. இன்று அரசு ஊழியர்களுக்கு, மாநில கேரம் போட்டி தொடங்கி, வரும், 13 வரை நடக்கிறது.