/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாய்மை பணியாளர்கள் 2ம் நாளாக தர்ணா
/
துாய்மை பணியாளர்கள் 2ம் நாளாக தர்ணா
ADDED : அக் 10, 2024 01:46 AM
துாய்மை பணியாளர்கள்
2ம் நாளாக தர்ணா
ஆத்துார், அக். 10-
நரசிங்கபுரம் நகராட்சியில் துாய்மை பணி மேற்கொள்ள, 70 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உள்ளனர். அவர்கள், சென்னையை சேர்ந்த, 'ெஹல்த்கேர் டெக்னாலஜி' ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் துாய்மை பணியாளர்கள், நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது தினமும் வழங்கப்படும், 308 ரூபாயை, 370 ரூபாயாக உயர்த்தி தருவதாக, தனியார் நிறுவனம் உறுதி அளித்தது. இரு மாத சம்பளமும் வழங்கவில்லை என குற்றம்சாட்டினர். தொடர்ந்து, 2ம் நாளாக நேற்று காலை, 7:00 மணி முதல், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த நிறுவனத்தினர், உயர்த்தப்பட்ட கூலியை இரு வாரங்களுக்கு பின் வழங்குவதாக கூறினர். அதற்கு துாய்மை பணியாளர்கள், 'நிலுவை சம்பளத்துடன் உயர்த்தப்பட்ட தொகையை சேர்த்து வழங்க வேண்டும்.
தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடத்தப்படும்' எனக்கூறினர். பேச்சு தோல்வி அடைய, மாலை, 5:00 மணி வரை, போராட்டம் நடத்திவிட்டு துாய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர்.