/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர் சாதனை
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர் சாதனை
ADDED : மே 15, 2024 11:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேச்சேரி: மேச்சேரி, குட்டப்பட்டியில் உள்ள, ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்(எஸ்.எஸ்.வி.,) பிளஸ் 1 படித்த மாணவர் ஓபுளி பிரசாந்த், அதன் பொதுத்தேர்வில், 600க்கு, 589 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
மேலும், 550க்கு மேல், 8 பேர், 500க்கு மேல், 29 பேர், 400க்கு மேல், 50 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். மாவட்ட அளவில் அசத்திய ஓபுளி பிரசாந்துக்கு, எஸ்.எஸ்.வி., கல்வி நிறுவன தலைவர் முருகேசன், பரிசு கொடுத்து பாராட்டினார். பள்ளி துணை தலைவர் வாசு, பொருளாளர் வேலுசாமி உள்ளிட்டோரும், மாணவ, மாணவியரை பாராட்டினர்.

