sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காட்டுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அவதி

/

ஏற்காட்டுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அவதி

ஏற்காட்டுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அவதி

ஏற்காட்டுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அவதி


ADDED : டிச 05, 2024 07:39 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காட்டில் கடந்த, நவ., 29 முதல், நேற்று முன்தினம் காலை வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்-டது. தொடர்ந்து

நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனால் குப்பனுார் மலைப்பாதையில் வானங்கள் சென்று வந்-தன. அச்சாலையிலும், கடந்த, 2ல் நிலச்சரிவு

ஏற்பட, பஸ் போக்-குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சேலம் சென்று வரும் உள்ளூர் மக்கள், இரு, 4 சக்கர

வாகனங்களில் சென்று வந்தனர். இந்நிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால்

மலைக்-கிராமங்களில் இருந்து ஏற்காட்டில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் வருவதற்கு,

வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள், பள்ளிக்கு வர முடியாமல்

அவதிப்பட்டனர். சிலர் வாடகை வாகனங்கள் மூலம் பள்ளிக்கு வந்தனர். சில பெற்றோர், குழந்தைகளை

இரு-சக்கர வாகனங்களில் அழைத்துச்சென்று பள்ளியில் விட்டனர். இருப்பினும் பெரும்பாலான குழந்தைகள்

பள்ளிக்கு வரமுடி-யாமல் போனது.அதேபோல் ஏற்காட்டில் இருந்து சேலத்துக்கு செல்லும் கல்லுாரி மாணவ, மாணவியர், பஸ்கள் இல்லாததால்

செல்ல முடிய-வில்லை. சிலருக்கு தேர்வு இருப்பதாக கூறிய நிலையில், அவர்கள் மட்டும் வேறு வழியின்றி,

வாடகை வானங்கள் மூலம் ஒருவருக்கு, 300 முதல், 500 ரூபாய் வரை கொடுத்து, கல்லுாரிக்கு சென்றனர்.

இதனிடையே நேற்று மதியம், 3:00 மணி முதல், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகுரக

வாகனங்கள் மட்டும், ஏற்காடு மலைப்பாதையில் செல்ல, கலெக்டர் பிருந்தா-தேவி அனுமதி அளித்தார்.

இதையடுத்து மலைப்பாதையில் இரு-சக்கர வாகனம், கார், சரக்கு வேன்கள் இயக்கப்பட்டன. ஆனால் கனரக வாகங்கள் இயக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் இன்று, ஏற்காட்டுக்கு பஸ்கள்

இயக்கப்படுமா என, மாணவ, மாணவியர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்காட்டில் உள்ள கிராம

மக்கள், ஏற்காடு டவுன் பகு-திக்கு கூட வர முடியாத சூழல் உள்ளது.






      Dinamalar
      Follow us