பள்ளி விடுதி துாய்மை பணியாளர் கள்ளக்காதலனுக்கு 'குண்டாஸ்'
பள்ளி விடுதி துாய்மை பணியாளர் கள்ளக்காதலனுக்கு 'குண்டாஸ்'
ADDED : செப் 09, 2026 06:08 AM
சேலம்:வாழப்பாடி
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதியில் மாணவியரை மது
அருந்தவைத்து, வெளி நபர்களால் பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த
மாதம், 13ல் புகார் எழுந்தது.
தொடர்ந்து வாழப்பாடியை சேர்ந்த,
விடுதி துாய்மை பணியாளர் ராதிகா, 42, அவரது கள்ளக்காதலன் ரகுபதி, 39,
ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து எஸ்.பி.,
குத்தாலிங்கம் பரிந்துரைப்படி, அந்த இருவரையும், குண்டர்
சட்டத்தில் கைது செய்ய, சேலம் கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார்.
மேலும் 2 பேர்
சேலம், கிச்சிப்பாளையம்
சன்னியாசிகுண்டு, சின்ன தாயம்மாள் நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 27,
பழனிசாமி நகரை சேர்ந்தவர் பூபதி, 23. இருவரும் கடந்த, 16ல் குகை
பகுதியை சேர்ந்த ஹரீஷ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 1,600
ரூபாய் பறித்துச்சென்றனர். கிச்சிப்பாளையம் போலீசார், இருவரையும்
கைது செய்தனர். விசாரணையில் இருவர் மீதும், பல்வேறு குற்ற வழக்குகள்
நிலுவையில் உள்ளது தெரிந்தது. இதனால் இருவரையும் குண்டர் சட்டத்தில்
கைது செய்ய, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார், உத்தரவிட்டார்.
