ரயிலில் அடிபட்டு தொழிலாளியின் 2 கால்களும் துண்டிப்பு
ரயிலில் அடிபட்டு தொழிலாளியின் 2 கால்களும் துண்டிப்பு
ADDED : செப் 09, 2026 06:08 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த, நெசவு தொழிலாளி முரளி, 32. நேற்று காலை, அதே பகுதியில்
மிலிட்டரி சாலை அருகே, இயற்கை உபாதைக்கு தண்டவாள பாதையை கடக்க
முயன்றார். அப்போது சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் வர,
அதில் அடிபட்டு, முரளியின் இரு கால்களும் துண்டாகின.
அவரது வலது
கையில், 3 விரல்கள் சிதைந்தன. அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம்
அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சேலம் ரயில்வே போலீசார்
விசாரிக்கின்றனர்.
