/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குப்பை கூடம் அமைக்க எதிர்ப்பு பள்ளி மாணவர்கள் தர்ணா
/
குப்பை கூடம் அமைக்க எதிர்ப்பு பள்ளி மாணவர்கள் தர்ணா
குப்பை கூடம் அமைக்க எதிர்ப்பு பள்ளி மாணவர்கள் தர்ணா
குப்பை கூடம் அமைக்க எதிர்ப்பு பள்ளி மாணவர்கள் தர்ணா
ADDED : நவ 07, 2024 01:08 AM
குப்பை கூடம் அமைக்க எதிர்ப்பு
பள்ளி மாணவர்கள் தர்ணா
சேலம், நவ. 7-
சேலம், வீராணம் அருகே பெருமாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
அதன் அருகே, மாநகராட்சி சார்பில் குப்பை தரம் பிரிக்கும் கூடம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி முன், மாணவர்கள், பெற்றோருடன் நேற்று காலை, தர்ணாவில் ஈடுபட்டனர். வீராணம் போலீசார், பேச்சு நடத்தினர்.அப்போது பெற்றோர், 'பள்ளி அருகே குப்பையை தரம் பிரிக்கும் கூடம் அமைத்தால் சுகாதார சீர்கேடு, மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது' என, புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனால் தர்ணாவை கைவிட்டனர். பின் மாணவர்கள், பள்ளிக்கு சென்றனர்.