/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி ஆசிரியர் கடத்தல்: நண்பர்கள் மீது வழக்கு
/
பள்ளி ஆசிரியர் கடத்தல்: நண்பர்கள் மீது வழக்கு
ADDED : டிச 18, 2024 07:13 AM
ஜலகண்டாபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், காட்டூர் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் ராமசாமி, 54. அதே பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் ஜலகண்டாபுரம் போலீசில் நேற்று அளித்த புகார் மனு:
என் குடும்ப தேவைக்கு, 50 பவுன் நகையை, ஆட்டையாம்பட்டியில் உள்ள வங்கியில் அடகு வைத்தேன். என் நண்பர்களான, பெருந்துறையை சேர்ந்த முத்துக்குமார், மூர்த்தி, ஜலகண்டாபுரத்தில் உள்ள வங்கியில் அதிக பணம் தருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த, 12ல் ஆட்டையாம்பட்டியில் நகையை மீட்டு, ஜலகண்டாபுரம் சென்றோம். அங்கு பணம் குறைவாக வழங்குவதாக, இருவரும் தெரிவித்தனர்.
பின் பெருந்துறையில் அதிக பணம் தருவார்கள் எனக்கூறி, நகையுடன் என்னை ஏற்றிச்சென்ற நண்பர்கள், பெருந்துறையில் இறக்கி விட்டு, அவர்கள் சென்றுவிட்டனர். பணத்துக்கு என்னை கடத்திச்சென்ற இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதனால், இருவர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.