/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி மாணவி கர்ப்பம் 65 வயது 'பெருசு' கைது
/
பள்ளி மாணவி கர்ப்பம் 65 வயது 'பெருசு' கைது
ADDED : செப் 22, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்தவர் வீரமுத்து, 65. அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்தார்.
இவர், 14 வயதுடைய, 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு, தின்பண்டம் வாங்கிக்கொடுத்து வந்தார்.இதை பயன்படுத்தி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். அவர் கர்ப்பமாக, அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோர் விசாரித்தபோது, அதற்கு காரணம் வீரமுத்து என தெரியவந்தது. அவர்கள் புகார்படி ஆத்துார் மகளிர் போலீசார், வீரமுத்து மீது, 'போக்சோ' வழக்கு பதிந்தனர். நேற்று அவரை கைது செய்தனர்.