ADDED : செப் 30, 2026 06:09 AM
பனமரத்துப்பட்டி; சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகள் - வேளாண் விஞ்ஞானிகள் கலந்து-ரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன், விதை உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் பயிர்-களில் ஏற்படும் பூச்சி நோய் தாக்கம் குறித்து விளக்கினார். கால்நடை அறிவியல் உதவி பேரா-சிரியை கோகிலா, கால்நடை வளர்ப்பில் புது தொழில்நுட்பம் குறித்து விளக்கினார்.
பூச்சியியல் வல்லுனர் ரவி, பயிர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வன-வியல் தொழில்நுட்ப வல்லுனர் கிருபா, வேளாண் காடுகள் குறித்தும், உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் களங்கவி, விதை முதல் அறுவடை வரையான தொழில்நுட்ப பயிற்சி அளித்தார். மேலும் சாகுபடி செய்துள்ள பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல் பற்றியும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விவசாயிகள் கேட்-டறிந்தனர். சேலம் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் அருணா, விதைச்சான்று அலுவலர் தீபாபிரியதர்ஷினி, உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் தனசேகர் உள்ளிட்-டோரும் பேசினர். வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, இடைப்பாடி, தலைவாசல், கெங்கவல்லி, கொங்-கணாபுரம் உள்ளிட்ட வட்டார விவசாயிகள் பயன்பெற்றனர்.
