/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிற்ப தொழிலாளி பலி கொலை வழக்காக மாற்றம்
/
சிற்ப தொழிலாளி பலி கொலை வழக்காக மாற்றம்
ADDED : ஜன 02, 2025 07:22 AM
பனமரத்துப்பட்டி: மல்லுார், பனங்காட்டை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ், 27. சிற்ப தொழிலாளி. இவரது தங்கை சம்யுக்தா, 24. பசுவநத்தம்பட்டியை சேர்ந்த மைக் செட் உரிமையாளர் சிவா, 32. இவரை சம்யுக்தா காதலித்து, 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். சில நாட்களாக தம்பதி இடையே குடும்ப தகராறு இருந்தது.
இதுகுறித்து மல்லுார் போலீசார், கொண்டலாம்பட்டி மகளிர் போலீசார் விசாரித்தனர். கடந்த டிச., 27ல் மல்லுார் பெருமாள் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சூர்யபிரகாஷ், சம்யுக்தா சென்றனர். அப்போது சூர்ய பிரகாைஷ, சிவா கத்தியால் குத்-தினார். சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவம-னையில் சூர்யபிரகாஷ் அனுமதிக்கப்பட்டார். 30ல், சிவாவை, மல்லுார் போலீசார் கைது செய்தனர். நேற்று மருத்துவமனையில் சூர்யபிரகாஷ் உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி, மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.