ADDED : அக் 23, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கும் விடுதிக்கு 'சீல்'
ஏற்காடு, அக். 23-
ஏற்காடு, மஞ்சக்குட்டையில், 'எல்லோ லேக்' பெயரில் செயல்பட்ட தங்கும் விடுதி, ஏரி பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக, சேலத்தை சேர்ந்த வக்கீல் ராம நாராயண சதீஷ் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில் அங்கு கட்டப்பட்டுள்ள, 16 கட்டடங்களில், 6க்கு மட்டும் கட்டட அனுமதி பெற்றது தெரிந்தது.
இதனால் அந்த கட்டடத்துக்கு, 'சீல்' வைக்க, கடந்த ஆக., 10ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தங்கும் விடுதி நிர்வாகத்தினர் மேல்முறையீடு செய்தனர். அதுவும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ஏற்காடு தாசில்தார் ரமேஷ்குமார் முன்னிலையில், ஒன்றிய கமிஷனர் வாசுதேவ பிரபு, அந்த விடுதிக்கு, நேற்று 'சீல்' வைத்தார்.

