/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகையிலை பொருள் விற்ற கடைக்கு 'சீல்' வைப்பு
/
புகையிலை பொருள் விற்ற கடைக்கு 'சீல்' வைப்பு
ADDED : பிப் 18, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு, உணவு பாதுகாப்பு துறையினர் 'சீல்' வைத்து, 60 ஆயிரம் ரூபாய் அப-ராதம் விதித்தனர்.
கெங்கவல்லியை சேர்ந்தவர் கருணாகரன், 61. இவர், அதே பகு-தியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்த கடையில், தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகா-ரின்பேரில், கடந்த, 14ல், கெங்கவல்லி போலீசார் ஆய்வு செய்-தனர். அப்போது, கடையில் விற்பனைக்கு வைத்திருந்த, 60 பாக்கெட் புகையிலை பொருட்களை (ஹான்ஸ்) பறிமுதல் செய்-தனர். நேற்று, உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமையி-லான அலுவலர்கள், மளிகை கடைக்கு 'சீல்' வைத்து, 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.