/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வசிஷ்ட நதியில் அடித்து சென்ற பெண்ணை தேடும் பணி தீவிரம்
/
வசிஷ்ட நதியில் அடித்து சென்ற பெண்ணை தேடும் பணி தீவிரம்
வசிஷ்ட நதியில் அடித்து சென்ற பெண்ணை தேடும் பணி தீவிரம்
வசிஷ்ட நதியில் அடித்து சென்ற பெண்ணை தேடும் பணி தீவிரம்
ADDED : டிச 03, 2024 07:00 AM
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, வசிஷ்ட நதியில் அடித்து செல்லப்பட்ட இளம் பெண்ணை தேடும் பணி நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த பேளூர் கோட்டை -மேட்டை சேர்ந்தவர் ராமன், 25.
வேட்டைக்காரனுாரை சேர்ந்தவர் சஞ்சா, 20. இருவரும், இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு பேளூர் ஈஸ்வரன் கோவில் பின்புறம்
வேட்டைக்காரனுார் அருகே, வசிஷ்ட நதி ஆற்றில் இருவரும் குதித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகார்படி, வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள்,
போலீசார் அங்கு சென்று அப்பகுதி மக்கள் உதவியுடன் இரவு, 11:30 மணிக்கு ராமனை
உயிருடன் ஆற்றில் இருந்து மீட்டனர். நேற்று வரை அவரது மனைவி சஞ்சா
கிடைக்கவில்லை. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சஞ்சாவை தேடி வருகின்றனர்.இதுகுறித்து, வாழப்பாடி போலீசார் கூறியதாவது;ராமன் குடி போதையில் வீட்டிற்கு வந்தபோது, மனைவி சஞ்சா-வுடன் தகராறு
ஏற்பட்டுள்ளது. இதனால் சஞ்சா கோபித்துக் கொண்டு, வேட்டைக்காரனுார் பகுதியில்
உள்ள அவரது தாய் வீட்டிற்கு சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது பின்னால் வந்த ராமன், தாய் வீட்டிற்கு செல்கிறாயா என கூறி, வசிஷ்ட
நதியில் குதித்துள்ளார். உடனே, சஞ்சாவும் குதித்துள்ளார். ராமன் உயிருடன்
மீட்கப்பட்டார். தொடர்ந்து, சஞ்-சாவை தேடும் பணி நடக்கிறது.இவ்வாறு கூறினர்.